பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 மாவீரன் சல்லியன்; கொடையாளி கன்னன் இந்த மாமன்னர்கள் இருக்க இந்த இடையன்தானா கிடைத்தான்? அரச பாலர்கள் பலர் இருக்க இந்தப் பசு பாலன் தானா கிடைத்தான்?' என்று சிசுபாலன் அடித்துச் சொன்னான். நூறு பிழைகள் வரை கண்ணன் பொறுத்து இருந்தான்; அதற்குமேல் எண் எட்டியது: அவனை விட்டு வைக்க விரும்பவில்லை. அவையில் அவனை வெட்டுவது கூடாது என்று அவைக்கு வெளியே அழைத்துப் போர் இழைத்து அவன் சிரசைத் தன் சக்கரத்தால் கொய்து அழித்தான். கண்ணன் பொறுமை அவையோரைத் திகைக்க வைத்தது; வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்ந்து நின்றனர்: சிசுபாலன் கண்ணன் அத்தைமகன்; அவன் பிறக்கும் போது அவலட்சணங்கள்