பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சில அவனை அடைந்திருந்தன; மூன்று கண்களும் நான்கு கரங்களுமாகப் பிறந்தான். தெய்வங்களுக்கு இவை அனுமதிக்கப்பட்டன; மானுடன், அது அவன் தாய்க்குக் கவலை தந்தது. கண்ணன் அவனைத் தன் மடியில் அமர்த்தி எடுத்து உட்கார வைத்தான்; அவன் மிகைப்பட்ட அவயங்கள் அகன்று நீங்கின கண்ணன்தான் இதற்குக் காரணம் என்று கருத்துப் பரவியது: அவனுக்கு நன்றி சொல்லப் பெற்ற தாய், "அவனுக்கு உயிர்க்காப்பு அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டாள். ஆற்றல் மிக்க கண்ணன் ஒருவன்தான் அவனை அழிக்க முடியும் என்று மதிப்பிட்டாள். 'நூறு பிழை செய்தாலும் தன் மகனை மன்னிக்க வேண்டும்' என்று கேட்டு உறுதி பெற்றுக் கொண்டாள்.