பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் 101 இதழகத் தனய தெருவம் இதழகத் தரும் பொகுட்டனத்தே அண்ணல் கோயில் தாதின் அனேயர் தண்டமிழ்க் குடிகள் தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான் மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம இன்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழா தெம் பேரூர் துயிலே’ (கோழி-உறையூர், வஞ்சி-வஞ்சிமாநகர், சேரர் த லைநக ரம்) என்னும் பரிபாடற் செய்யுள் பழந்தமிழர் நகர மைப்புக் கலைக்கு ஏற்ற நல்ல மேற்கோளாக அமையும் தகைத்து. இப்பாடலில் அண்ணல் கோயில்’ என்பதற்குப் பாண்டிய மன்னனது அரண்மனை என்ருே இறைவன் ஆல யம் என்ருே எப்படிப் பொருள் கொள்ளினும் பாடல் நகர மைப்பு நலனையே விளக்கி நிற்கிறது. . காஞ்சி நகரம் மயிலின் அமைப்பைக் கொண்டு விளங் கியது எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றும் நமக்குச் சான்ருகக் கிடைக்கிறது. 'ஏரி இரண்டும் சிறகா எயில் வயிருக் காருடைய பீலி கடிகாவா-நீர்வண்ணன் அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப் பொலிவு' என்ற வெண்பா தண்டியலங்கார நூலில் இயைபுருவக அணிக்கு மேற்கோளாகக் காட்டப்படுகிறது என்ருலும் இங்கு நகரமைப்புக் கலைக்கும் மேற்கோளாகிச் சிறக்கிறது. இவ்வாறு பார்க்குங்கால் தொன்மையான கிரேக்கக் கட்டிடக் கலைக்குச் சிறிதும் குறையாத கட்டிடக்கலை தமி ழர் கட்டிடக்கலை என்றும் உலகின் புகழ் பெற்ற நகர மைப்பு நயங்களுக்கு ஒரு சிறிதும் குன்ருத நகரமைப்புக் கலேகளில் தமிழருடையதுவும் ஒன்றென்றும் உய்த்துணர வழி இருக்கிறது. . . . . . தி-7.