பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*112 நா. பார்த்தசாரதி

யும் நுணுகி நோக்கினும் இக் காதையின் ஒரு சில சிறப்புக் களுக்கு இணையான சிறப்புக்களைக் கொண்ட வேறு காதை

யைக் காணவே இயலாது எனத் துணிந்து கூறலாம். மேலெழுந்த வாரியாக நோக்கினும், தெற்றெனப் புலப்படும் இக்காதையின் சிறப்புக்களைப் பட்டியலிட்டுப் .பார்ப்பது நலம் பயக்கும். சிறப்புக்கள் வருமாறு. - 1. மாதவிஎன்னும் மங்கைநல்லாள் காப்பியமெங்கும் பேசப்படுகிருள். கதைத் தலைவி கண்ணகிக்கு இணையான பாத்திரமாக அவளை இளங்கோ படைத்துள்ளார். கண் கணகி என்னும் கருங்கயல் கண்ணியின் கற்புத் திறத்தைப் பேசுவது எளிது. அவள் கொடியில் பூத்த மலர், குலக் கொடி. ஆனல் மாதவி என்னும் செங்கயல் கண்ணி, கண் -ணகி போன்றவள் அல்லள். இவள் சேற்றில் பூத்த செந் தாமரை, சித்திராபதியின் வயிற்றில் தற்செயலாய் வந்து தோன்றிய நல்முத்து. இவளது கற்புத்திறத்தைப் பேசு வது கடினம். உலகோர் அதனை ஒப்பும் வண்ணம் அதனை உர்ைக்க வேண்டும். யாழிசை மேல்வந்து ஊழ்வினை உருத்து ஊட்டும் போது படிப்போரெல்லாம் மாதவிக் காகவும் கண்ணிர் வடிக்க வேண்டும். அவ்விதத்தில் மாதவி என்ற பாத்திரம் படைக்கப்பட வேண்டுமானல், அறிமுகம் தொட்டே அப்பாத்திரத்தைச் செம்மையாக வார்த்தாக வேண்டும். இத்தகைய பெரும் பொறுப்பை மேற்கொண்ட இளங்கே, அரங்கேற்று காதையில் மாத வியை அறிமுகப்படுத்துகின்ற பணியைத் திறம்படப் புரி கின்ருர் மாதவியின் அறிமுகம் இக்காதையிலேயே நிகழ்த்தப்படுவதால் இது தனிச் சிறப்படைகிறது. 2. கோவலன் கண்ணகியை விட்டுவிட்டு மாதவி யுடன் சென்று விடுவது காப்பியத்தின் மிகவும் குறிக்கத் தக்க ஒரு கதைப் பகுதியாகும். இதனை ஆதாரமாகக் கொண்டே, பின்னர், காப்பியம் முழுவதும் அவலங்கள். பின்னப்படுகின்றன. அரங்கேற்று காதையில் கதைப்பகுதி மேற்போக்காக மிகவும் குறைவாகவே இருப்பினும்,