பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-114 nr. பார்த்தசாரதி மயங்கிய கோவலன் அவளுடைய கேண்மையைப் பெற்ற செய்தியையும் கூறும் பகுதி' என்பர் உரையாசிரியர். "சிறப்பில் குன்ருச் செய் ையொடு பொருந்திய பிறப்பில் குன்ருப் பெருந்தோள் மடந்தை' மாதவி ஆடிய ஆட்டத்தை அரசன் மெச்சி. அவளுக் குத் தலைக்கோல் என்ற விருதைக் கொடுக்கிருன். ஆயிரத் தெண் கழஞ்சுப் பொன் மதிப்புள்ள ஒரு மாலையையும் பரிசாய் அளிக்கிருன், மாலை கைக்கொண்டு ஒரு மானமர் • . நோக்கியாம் கூனி நகர நம்பியர் திரிதரு மறுகில் மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கென விலை பேசுகிருள். மாமலர் நெடுங்கண் மாதவி மாலையைக் கோவலன் வாங்கு கிருன் பிறகு கூனியோடு மணமனை புக்கு மாதவி தன் ைேடு வாழத் தொடங்குகிருன். விடுதல் அறியா விருப்பினன் ೩೨೯Tr என்று கோவ லன் மாதவிபால் கொண்ட நேசத்தை இளங்கோவடிக்ள் குறிக்கிருர். - காதையின் இறுதியில், எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் பண்ணின்ற கூத்துப் பதினென்றும்-மண்ணின்மேல் போக்கினுள் பூம்புகார்ப் பொற்ருெடி மாதவி வாக்கினல் ஆடரங்கில் வந்து' என்ற அழகிய வெண்பாவும் காணப்படுகிறது. மாதவி ஆடிய நடனத்தைப் பற்றிக் கூறும் போது ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன்அமைதி, கவிஞன் அமைதி, தண்னுமையோன் அமைதி, குழலோன் அமைதி. யாழாசிரியன் அமைதி, நாடக அரங்கின் அமைதி, தலைக் கோல் அமைதி ஆகியனவும் கூறப்படுகின்றன.