பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணத்தில் வரும் ஊர்கள் 127° 'நாவல் நகர் ஊரான்' என்றும், 'திருநாவ லூரான்' என்றும் இரண்டிடங்களில் நம்பியாரூரர் பெயர் வரோடு சார்த்திப் பேசப்பட்டுள்ளது. - . . . . முதன் முறையாக இவ் வி தம் குறிக்கும்போது, இறைவனே மனமுவந்து ஆரூரர்க்கு அளித்த பட்டப் பெயர் போல இறைவன் திருவாயாலேயே இது மொழியப் பட்டுள்ளது. - . - ஆவதிது கேண்மின் மறையோர் என் அடியான் இந் காவல்நகர் ஊரன் இது நான்மொழிவ தென்ருன் தேவரையும் மாலயன் х முதல் திருவின் மிக்கோர் யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான் சேக்கிழாரே ஆரூரரைத் திருநாவலூரான் எனக் கூறு கின்ற இடமும் குறிக்கத் தக்க ஒன்ருகும். 'என்ருன் இறையோன், அது - கேட்டவர் எம்மருங்கும் நின்ருர் இருந்தார், இவன் என் நினைந் தான்கொல்' என்று சென்ருர் வெகுண்டார் சிரித்தார் திருநாவலூரான் 'நன்ருல் மறையோன் மொழி என்றெதிர்நோக்கி நக்கான்' என்ற பாடலில் திருகாவலூரான் என ஆசிரியர் கூற்றகவே. “. . . வருவது மிகவும் கருதிக் கவனிக்கத் தக்க ஒன்ருகும்.