பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நா. பார்த்தசாரதி திருத்துறையூர், பொற்புலியூர், திருவதிகை, திருமா ளிைக்குமி, கழுமலம், திருக்கோலக்கா, திருப்புன்கூர், மயி லாடுதுறை, திருப்புகலூர் முதலியன இவ்வகையில் குறிப் பிடத் தக்கவை. ஆரூரரைச் சார்த்தி இத்துனே ஊர்களையும் குறித்த சேக்கிழார், மணம் வந்த புத்துளரை மட்டும் சிவ வேதியன் மகளைச் சார்த்திக் குறிப்பிடுகிரு.ர். ஆரூரரை மணுளணுக மணக்க நிச்சயிக்கப்பட்டிருந்த தருணத்தில், அந்த மணம், இறைவனே தடுத்தாட் கொண்ட காரணத்தால் நின்றுவிடுகிறது. மங்கை நல் லாளாகிய சிவ வேதியன் மகள், ஆரூரருக்குரிய மணமக ளாக நிச்சயிக்கப்பட்ட பேற்றுக்குரிய காாணத்தாலேயே சிவலோகமும் எளிதாம் வகை பெற்ருள் என்கிருர் சேக் கிழார். - - 'அயலோர்தவம் முயல்வார்பிறர் அன்றே மணம் அழியும் செயலால் நிகழ் புத்துணர்வரு சிவவேதியன் மகளும் உயர்நாவலர் தனிநாதனை ஒழியாதுனர் வழியில் பெயராதுயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்ருள்' , மணம்வந்த புத்துாரது மணமகளின் வாழ்க்கைப் பயனை விளக்கும்போது ஊர்ப் பெயரையும் மறக்காமல் சேக்கிழார் குறிப்பிடுவது நோக்கத் தக்கது. ‘. இவ்விதம் எல்லா ஊர்களும் மிகச் சிறப்பாகவும் பொருத்தமான வகையிலும் தடுத்தாட் கொண்ட புரா ணத்தில் பேசப்பட்டுள்ள அழகு, நினைந்து, உணர்ந்து, மகிழத்தக்கதாகும். . . .