பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் நுண்கலைகளும் 37 முழு வடிவமும் பயனுமுள்ள கலைப் பொருளாக்கும் திறன் இலக்கியத்துக்கு இருக்கிறது. கலை, சிற்பம், ஒவியம் போல இலக்கியமும் கருத்துக்கு வடிவம் தந்து விளக்கிலுைம் கருத்து நுணுக்கத்தை உருவாக்குவதும் ஒன்றைப்பற்றி நிலைத்துநின்று எதிர்வரும் பலகாலத்துக்கு விளக்கிப் பயன்படுவதும் இலக்கியத்தால் முடியக் கூடிய செயல்க ளாக உள்ளன. ஒவியம், சிற்பம், நாட்டியம், சித்திரம் போன்ற நுண் கலைகளை நாடு மொழி எல்லைகளைக் கடந்து பார்க்குந்திற னுள்ள யாவரும் சுவைக்க முடியும். இலக்கியக் கலையையோ, மொழியும் அதன் நுணுக்கங் களும் புரிந்தவர்களே சுவைக்க முடியும். ஒவியம், சிற்பம், போன்றவை அவ்வப்போது பயனளித்து மறைந்துவிடக் கூடியவை. நீடித்து வாழ்ந்து பல தலைமுறைகளுக்குப் பயன்தரவல்லது. ஒவியத்தைப் பேசாப் பாட்டு என்றும் கூடக் கூறுவார்கள். - ஆபர்கிராம்பி என்னும் இலக்கியத் திறய்ைவாளர் கலைகள், நுண்கலைகள் கவின் கலைகள் எல்லாவற்றையும் விட இலக்கியக் கலையே சிறந்து விளங்குவது என்று கூறு கின்ருர். மனிதனை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி உயர்த்தி மனித வாழ்வின் சிறப்பியல்பாக உள்ள மொழி யில்ை படைக்கப்படுவதாலும் வழிவழியாக நயம் பெருக விளங்கிப் பயன் நல்கக் கூடியதாக இருப்பதாலும் மற் றெல்லாக் கலைகளையும்விட இலக்கியக் கலையே சிறந்தது என்று அவர் கூறுகிருர் அவர். நுண்கலைகளுக்கு இல்லாத நிலைத்த நீடித்த பயன் இலக்கியக் கலைக்கு மட்டுமே இருக் @pg| Graši Lig egy Luftstgirlbstlustgör (L. Abercrombie–The Idea of Great Poetry page 29) 5(533,7651b. மனிதன் படைத்த கருவிகளில் மிகமிகச் சிறந்தது மொழியே. மொழியில்லாவிட்டால் மக்களுக்குள் சிந்த னைத் தொடர்பு இல்லை. அரசாட்சி இல்லை. நாடுமில்லை. வாணிகம், உலக உறவு எதுவுமே மொழியின்றி இல்லை. தி-3.