பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை கலைக்காகவே ! இலக்கிய இயக்கங்கள் இன்று இரு பெரும் பிரிவுகளின் கீழ் அடங்குகின்றன. கலே கலைக்காகவே' என்பது ஒன்று. 'கலே மக்களுக்காகவே' என்பது மற்றென்று. இரண்டு இயக்கங்களுமே 19-ம் நூற்ருண்டில் இங்கிலாந்தில் தோன் றியவை. கலை கலைக்காகவே என்ற இயக்கத்தின் தந்தை வால்டேர் பேடர் (Walter Pater) ஆவர். கலை மக்களுக் காகவே அல்லது வாழ்க்கைக்காகவே' என்ற இயக்கத்தின் தந்தை மாத்யூ அர்னல்ட் (Matthew Arnold) ஆவார். அநுபவித்தல், துய்த்தல் அல்லது முருகியல் இயக்கம் (Aesthetic Movement) GT6örGp $g] g[ Gotp&#Gli Lul_sort யிற்று. இத்துறையின தொடக்கம் இவ்வாறு அமைந்தது. இனி மற்ற விவரங்களை விரிவாகக் காணலாம். இருபெரும் பிரிவுகள் கலை வெறும் பொழுது போக்குக்காகவும் அநுபவித்து இன்பம் பெறுவதற்காகவுமே அமைதல் வேண்டும் என் போர் ஒரு சாரார். கலை எல்லா வகையாலும் பயனும் நோக்கமும் கருதியே இருக்க வேண்டும் என்போர் மற் ருெரு சாரார். முதற்பகுதியைச் சேர்ந்தவர்கள் தஞ்சைக் கோபுரத் தைப் பார்க்க வரும் பல்லாயிரக்கணக்கான உல்லாசப் பய னிகளும், மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை யையோ, புதுமண்டபத்துச் சிற்பங்களையோ காணவருகிற வர்களும் மகிழ்ச்சிக்காகவும், இன்பத்துக்காகவும் தானே அவற்றைக் காண வருகின்றனர்? இவற்றைக் காண்பதளுல்