பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நா. பார்த்தசாரதி இன்ன பயன் விளைய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டோ இன்னின்ன பயன்கள் விளையும் என்று எதிர் பார்த்தோ அவர்கள் வருவதில்லையே?' காண்பதால் ஏற் படும் மகிழ்ச்சியும் இன்பமுமே பயன்கள் தாமே? எதிர் பார்த்தோ, எதிர்பாராமலோ கிடைக்கிற மகிழ்ச்சியும், இன்பமும் பலன் இல்லையென்று யாராவது சொல்லிவிட முடியுமா? கலை நுகர்ச்சியின் எல்லாப் பிரிவுகளிலும் நுகர்ச்சி என் பதற்கும் மேற்பட்டுப் போய்ப் பயன் தேடுதல் சரியில்லை என்பது ஒரு கருத்து. ஆஸ்கார் ஒயில்டு (Oscar Wilde) ஒரு முறை, 'என் கதைகளின் முடிவில் அவற்றிலிருந்து பயனே. உபதேசமோ பெற முயல்கிறவனைப் பார்த்தால் உடனே அவனைச் சுட்டுக் கொன்றுலிடத் தயங்கமாட்டேன்-என் முன். அசல்கலை நுகர்ச்சிவாதிகளின் கருத்து அது. கலைப் படைப்பின் போது கலைஞர்கள் உணர்ச்சிமயமானதொரு தனி உலகில் இருந்து படைக்கிருர்கள். நோக்கத்தைக் கற் பித்துக் கொண்டு படைத்தால் அந்த உண்ர்ச்சிமயமான நிலை இராமலும் போகலாம். படைக்கும்போது எதையும் நினைத்தோ திட்டமிட்டோ கலைஞன் படைப்பதில்லை. ஏ. சி. பிராட்லி (A. C. Bradley) யும் ஏறக்குறைய இத் தகைய கருத்துடையவராகவே காணப்படுகிரு.ர். கலைஞன் ஒருவன் படைக்கும் படைப்புத் தனி உலகத்தைப் போன் றது. அந்தப் படைப்புலகின் உள்ளே புகுந்து அதனை அது பவிக்கும் போது-அப்படி அநுபவிக்கிறவனுக்குப் பெளதிக-வெளி உலகின் நினைவே வரக் கூடாது. கற்பனை யின் துணைகொண்டு கதையாகவோ, கவிதையாகவோ, படைக்கப்பட்டு வெளியிடப்படுகிற ஒன்றினைப் படித்து அநுபவிப்பவர் அவ்வாறு படித்து அநுபவிப்பதல்ை என்ன பயன் விளைகிறது என்று கூட்டிக் கழித்துக் கணக்குப்பார்க் கக் கூடாது. அவ்வாறு கூட்டிக் கழித்து நிறுத்துக் கணக் குப் பார்ப்பது இலக்கிய நுகர்ச்சியால் விளையும் இன்ப அதுபவத்தைக் கெடுத்துவிடுகிறது. பயனையும், விளைவை