பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நா. பார்த்தசாரதி வாகனம் அல்ல. தட்டு முட்டுச் சாமான்களைக் கொண்ட மட் டும் அள்ளிப் போட்டுக் கொண்டு சுமக்கும் பார வண் டியோ லாரியோ அல்ல படைப்பிலக்கியம். அது மென்மை யானது. நாசூக்கானது. நீதி போதனை தர்க்க நியாயங் கள், அறவுரைகள், உபதேசங்கள், அறிவுரைகளை ஏற்றிச் செல்லும் கட்டை வண்டி அல்ல கவிதை என்பதைக் கலை கலைக்காகவே' எனும் தரப்பினர் வற்புறுத்திக் கூறுவர். ஏ. சி. பிராட்லியும் இவ்வாறே கருதுகிருர் ஆல்ை இக் கருத்தை அழுத்தமாக மறுப்பவர்களும் உண்டு. . வாகனம் தான் கலை, கவிதை, கதை எல்லாம் பயன் உடைய வையாகவே இருத்தல் வேண்டும், அவற்றில் பயன் களையோ, விளைவுகளையோ தேடுவது ஒன்றும் தவறில்லை." என்னும் மற்ருெரு தரப்பும் உண்டு. - கோலரிட்ஜ் (Coleridge) இணையில்லாத தத்துவஞானி யாக இல்லாத ஒருவன் சிறந்த கவிஞகை விளங்க முடி யாது' என்றே கூறுகிருர், எமர்சன் (Emerson) கூறும்போது உன்னதமான கவி ஞர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் அவர்கள் இயற் றிய கவிதைகள் பிறர் மனத்தில் என்னென்ன விளைவு களைத் தோற்றுவிக்கிறதோ அந்த விளைவுகளைக் கொண்டே முடிவு செய்யப்படுகிருர்கள்-என்று கூறுகிருர், 'மனித வாழ்க்கைக்குத் தேவையான நற்பயனேத் தரா மல் அதைத் தரும் நல்லொழுக்கத்திற்கு எதிராகப் போதிக் கும் எந்தக் கலைப்படைப்பும் மனிதகுல நல்வாழ்வுக்கு எதி ராகச் செய்யப்படும் கலகமே ஆகும்' என்கிருர் மாத்யூ -offsjävli. (Matthew Arnold) - 'கோலரிட்ஜையும், எமர்சனயும். ஆர்னல்டையும் போல் பயனுக்காகவும், வாழ்க்கைக்காகவுமே கலைப்