பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?8Q நா. பார்த்தசாரதி என்னும் வடிவம் ஏற்றதாகும். இதன் காரணமாகப் பன் மையான எல்லாம் என்பது முழுமையைக் குறித்தல்' என் லும் பொருளில் ஒன்றன் பாலுக்கும் வருகிறது. தன்மை யில் அதனது வழக்காறு மறைகிறது. பிறவிடங்களில் எல் லாம்' என்பது அஃறிணைக்கே என்றநிலை மாறுகிறது. புற நானுாற்றில்கூட அது பலர் பாலுக்கு வருகிறது. சான்று: சான்ருேர் + எல்லாம் (புறம் 63-5) இத்தகைய வழக்குகள் மிகுதியாகின்றன. இதே போல உண்டு என்பதும் எல்லா இடங்களுக்கும் பால்களுக்கும் பொதுவாகிறது. (உண்+து > உண்டு-'து' என்பது ஒன்றன்பால் விகுதியாகும். சிலப்பதிகாரத்தில் இது (பெண்டிரும் உண்டு கொல்] உயர்திணை வழக்காக வருகி றது. (சிலம்பு 19-51) அன்வடிவு மறைதல்: 'அன்' சாரியை உடைய வினைமுற் றுக்கள் மெல்ல மறைந்து நெட்டுயிருடைய வடிவங்களுக்கு இடந்தருகின்றன. செய்தன்று’ என்னும் வாய்பாடு மறைந்து செய்தது வருகிறது. ஆகின்று, ஆயின்று என் பன மறைந்து ஆயிற்று' என வருகிறது. இங்கு மூக் கொலி வெடிப்பொலியாகியுள்ளது. "கள்விகுதி பன்மை விகுதியாகிய கள் தொல்காப்பி யத்தில் முதன்முதலில் மக்கள்' என்ற சொல்லில் இடம் பெறுகிறது. இதிலுள்ள கள் விகுதியை எளிமையாகப் பிரிக்க முடியாது. பின்னர் தொல்காப்பியர் கருத்துப்படி அது அஃறிணையுடன் வருகிறது. அதற்குப் பின்னர் அது உயர்திணையுடனும் வருகிறது. திருக்குறளில் வரும் மற் .றையவர்கள் (திருக்-263) என்னும் பிரயோகம் கவனிக்கத் தக்கது. இரட்டைப்பன்மை வடிவங்களான அவர்கள்' போன்றவற்றின் ஆட்சி இதன்பின் மிகுகிறது. வினையெச்சம்: கொளிஇ போன்ற இறந்தகால வினை எச்சங்களின் ஆட்சி குறைந்து உடம்படுமெய்களை உடைய