பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமரச வாழ்வு

முற்பகல் நேரம், வழக்கம் போல தினகர் முகப் புக் கூட சோபாவில் தினகர் அமர்ந்து எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருந்தார். கூடத்தில் வெளியே பணியாள் ஒருவர் தினகரது உத்திரவிற்கு காத்துக் கொண்டிருந்தார்.

" மங்களம் ” கம்பீரமான குரல். or மகாராஜா உத்திரவு” பணியாள் மங்களம் முகப்பில் இருந்து கூடத்திற்குள் வந்து பவ்யமாக நின்றார்.

" பின் கட்டிற்குப் போய் லாயத்தில் உள்ள குதிரைக்கு புதிய புல் போடப்பட்டிருக்கிறதா. காலையில் கொள்ளு கொடுக்கப்பட்டதா என்பதை குதிரைச் சேவகரிடம் கேட்டுத் தெரிந்து வா. அத்துடன் குதிரையின் பிடரியில் வேனல் கட்டி போன்ற சிறிய வீக்கம் இருந்தது. எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்துவா ” தினகரது கட்டளை.

93