பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது உடலை காஷ்மீர் சால்வையினால் போர்த்தினர்.

கண் இமைகள் மூடி இருந்தாலும், கம்பீரமான தோற்றம், உயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பது போன்ற

பிரமை பார்ப்பவர்களுக்கு

அவர்தான் மீளாத உறக்கத்தில், உயிர்ப்பு இல்லாத மரணத்தில் மூழ்கிவிட்டாரே. சேதுபதி மன்னரது குடும்பத்தில் யாரும் வாழாத எழுபத்து இரண்டு ஆண்டு காலம் வாழ்ந்த அவரது வாழ்க்கை முடிந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டன.

ஆம், தினகர சேதுபதி மறைந்து விட்டார்.

சிறப்புமிக்க செந்தமிழ்ச் சேதுபதிகளது குடும்பத்தில் அரசிளங்குமரனாகப் பிறந்து, வளர்ந்து, ஆன்ம நேயத்தையும் அரிய புலமையும் பெற்ற பல்கலைச் செல்வராகவும், பரோபகாரியாகவும் வாழ்ந்து, இயேசு நாதர து இரட்சண்ய ஜீவியத்தில் இணைந்த கிறித்தவராக மரித்துவிட்டார்.

அவர் மரணமுற்ற அந்த நாள் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டாம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினொன்றாம் நாள்.

இந்த மண்ணில் மனிதப் பிறவி பெற்ற மனிதர் அனைவரும் மரணம் என்ற ஆலகால விஷம் போன்ற கொடிய பானத்தைப் பருகித்தான் ஆக வேண்டும் என்ற

II2