பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியதியை இறைவன் ஏற்படுத்தி இருக்கிறான். இந்த இறையாண்மைக்கு அனைத்து மனிதரும் கட்டுப்பட்டு காலத்தினால் கவர்ந்து செல்லப்படுகின்றனர். அவர்களது பூத உடல்கள் மண்ணுக்கு தீனியாகி விடுகின்றன. இன்னும் சிலரது உடல்கள் நெருப்புக்கு இரையாகி சாம்பலாகி விடுகின்றன.

ஆனால் விரல் விட்டு எண்ணக்கடிய ஒருசிலரது பூத உடல்கள் புதைந்து, நமது பார்வையில் இருந்து மறைந்தாலும், மறைந்த அந்த மகத்தான மனிதர்கள், மகான்களாக, மக்களுக்காக மக்கள் நலிவு தீர்க்க பாடுபட்ட தொண்ட்ராக மக்களுக்கு நல்வாழ்வு சேர்க்க நாளும் உழைத்த உத்தமமகான்களாக, உபகாரிகளாக மக்களில் என்றென்றும் நினைவு கொள்ளும் புகழ் உடலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

அந்தப்பட்டியலில்தான் தினகர சேதுபதியும் இடம் பெற்றுள்ளார்.

அவரது அறக்கொடைகளை, ஆன்மிக உள்ளத்தை நன்றியுணர்வோடு எண்ணும் வரை, ٹکےP/ 65) T 4.5V புலமையையும், இலக்கியப் படைப் புகளையும் நடுநிலையோடு சிந்தித்து சுவைக்கும் வரை, உன்னத ஒவிய, இசைத்திறமையையும் அறிந்து மகிழும் வரை, அவரது ஸ்துல சரீரத்தைவிட அளவிலும், பெருமையிலும் பன்மடங்கு உயர்ந்து சிறந்த புகழ் உடம்பு இந்த உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

పక్ష

II.3.