பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r r

ஏறு மயிலேறி விளையாடுமென் ற”கவியில் السوي ويبلک முகங்களும் ஆறு கிருத்தியங்களைக் குறிக்குஞ் சின்னங்களாகத்துலக்கப்பட்டுள்ளன. அதாவது :இவ்விதத்தினால் மறைபொருளான தத்துவத்தை, அல்லது உண்மையை, சொளுபமாய் வெளிப்படக் காட்டும் உபாயமென்று கருதவேண்டியது. இவ்விதமே சிவனின் சடாமகுடத்தில் கெங்கையை ஒரு ஸ்திரியாகச் சொரூபித்துக் காட்டுவதானது கடவுளினது காருண்யத்தைக் குறிக்கும் அடையாளமாம்.

அன்பிற்குமுண்டோ வடைக்குந்தாழார்வலர் புன்கணிர் பூசறரும்.

என்ற திருவள்ளுவனாரின் வாக்கின் படி இயற்கையான கண்ணிர் ஜலமானது, அன்பினது அடையாளமாகிறது. அன்பினாலுண்டாகும் காருண்யத்திற்கு அடையாளமாக, சிறப்பும், அளவில்லாத் தன்மையுமுள்ள கெங்கா ஜலத்தைக் கடவுளின் முடியின் மீது வைத்தது உபாயமே.

கடவுளின் காருண்யமான தத்துவத்ைைத, அல்லது உண்மையை, மறைபொருளாய் வைத்துக் கெங்கையாகக் காட்டினதற்கு இது காரணமே. இக்கவியின் விசேஷமென்ன வென்றால் ஆறு முகங்களும், ஆறு கிருத்தியங்களைக் குறிக்கும் சின்னங்களென்று சொன்ன பின் அதன் உட்பொருளை "நீயருள வேண்டும்” என்று ஆதி அருணாசலத்தின் கண்ணே யமர்ந்த பெருமானை நோக்கிச் சொன்னது தான் இதிலடங்கிய அருமைப் பொருள். "பொருள்” எனும் பதத்துக்கு அதன் அர்த்தத்

727