பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாவது, அல்லது ஸ்துாலத்தாலாவது, நமது மனதை

உணரச் செய்யாவிடில் அது பொருளாகமாட்டாது.

மயிலை நேர்முகமாகப் பார்த்த பொழுது, மயிலென்ற பதத்தின் அர்த்தம் எந்தப் பொருளைக் குறிக்கிறதென்று எல்லோருடைய மனதுக்கும் மிக எளிதாய்த் தோன்றுதல் போல, இங்கே “பொருள்” என்ற வார்த்தையானது, சொரூபத்தைக்குறிக்கும் அபிப்பிராயத்தை மிகச்சுலபமாய்

உணர்த்துகிறது.

மேலும் ஒர் கிருத்தியத்தைச் செய்யவேனுமாயின் கரசரனாதிகளுள்ள சரீரம் அவசியமிருக்க வேண்டும். ஆதலால் இக்கவியில் சொன்ன ஆறு கிருத்தியங்களையும் நடத்துவதற்கேதுவான சரீரத்தில் குமாரக்கடவுள் அவதாரம் செய்யவேண்டியதன் அவசியமே பொருளென்ற வார்த்தையால் குறிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கருத்தையும் சிலர் ஆவேடிபிக்கலாம். அதாவது அந்தர்யாமியாயிருக்கும் கடவுள் சிருஷ்டி, திதி, சம்ஹாரம், என்ற மூன்று கிருத்தியங்களையும் சரீரம் எடுத்துத் தானா நடத்திவருகிறார் ? என்று கூறலாம். இக்கவியை சற்று நோக்குங்கால், இதன் முதல் வாக்கியத்தில் சொல்லியிருக்கும் கிருத்தியமானது விளையாடும் என்ற வார்த்தையினால் பிறப்பையும், குழந்தைப் பிராயத்தையும், குறிக்கிறது. இக்கர்மவுலகில் தான் பிறப்பும் இறப்பும், குழந்தைப் பிராயமும் யெளவனமும் முதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளன. குமாரக்கடவுள் இப்பூமியின் கண் அவதரித்த ரென முன் சொன்ன வாக்கியத்தின் கருத்துக்கினங்க

I 28