பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத் துவங்களை ஆராய்ச்சி செய்தவர்கள் இக் கர்மலோகத்தில் ஏற்பட்டுள்ள ஆண், பெண், என்கிற பேதம், வானுலகத்தில் இல்லையென்று நன்கு அறிவார்கள். பிறப்பு எங்கே இருக்கிறதோ, அங்கே இறப்பும் தொடர்ந்தே இருக்குமென்பது திண்னமில்லையா? இறப்பு எங்கே இருக்கிறதோ அங்கே சந்ததி அற்றுப்போகாமல் இருப்பதற்கு பிறப்பும் இருக்குமென்று நிச்சயமில்லையா?

வானுலகத்தில் பிறப்பும் இறப்பும் இல்லாததால் அங்கே ஆண், பெண், என்ற பேதம் உளதில்லையாம். பிறப்பும் இறப்பும் இக்கர்மலோகத்தை ஒட்டியது. அது பாவத்தினிமித்தமாக வந்தது. வானுலகத்தில் தேவர்கள் செய்யும் பாவத்தினால் நித்திய சரீரத்தை விட்டு, இந்த

கர்மலோகத்தில் அ.நித்திய சரீரிகளாய் ஜென் மெடுக்கிறார்கள். ஆனால் இந்நிலைமை பாவமில்லாலே அன்பினால் துரண்டப்பட்டு

பரோபகாரத்தை விரும்பிய, தேவர்கள் தன் சொந்த இச்சையினாலேயே தன் நித்திய சரீரத்தை விட்டு இவ்வுலகில் ஒர் போதகர், அல்லது ஒர் சமயாசாரிகளாக, அநித்திய சரீரத்தில் பிறந்து உபதேச மூலமாய் நமக்குப் பிரயோசனத்தைச் செய்வார்கள். “ஒவ்வொரு யுகத்திலும் தருமம் வழுவும்போதெல்லாம் நான் அவதாரம் செய்வேனென்று” விஷ்ணு அவதாரமாகிய பூரீ கிருஷ்ண பகவான் பகவத்கீதையில் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு சென்ற மூன்று யுகங்களில் அவதாரம்

செய்தவர். பாவம் மிகுதியாக இக்கலியுகத்தில் அவதாரம்

செய்திருக்கிறாரா? என்று ஆத்ம விசாரனையில்

I33