பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பத்திலிருந்து வழியும் ஜலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

கடவுளின் காருண்யத்தை தமது குமாரனின் அன்பால் உலகத்திற்கு வந்த நாசத்தை எச்சரித்து கும்ப முனியாகிய அகஸ்தியர் மூலமாக அறிவிக்கப்பட்டனவாம். கடவுளின் காருண்யத்தை நமது நாட்டுக்கு அறிவிக்கச் செய்த அகஸ்தியரின் சிறப்புப் பெயர் கும்ப முனியென்று வழங்கியதற்குக் காரணம் இதுவே. இதை அலங்கார இலக்கணத்துக் குகந்ததாக புராணிகர்கள் கடவுளின் காருண்யமாகிய சமுத்திரத்தையே

அகஸ்தியபானஞ் செய்ததாகக் கூறினார்கள்.

கடவுளினுடைய காருண்யத்தின் அளவை அகண்ட சமுத்திரத்தின் விசாலத்திற்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட தானது ஒர் அலங்கார இலக்கணமே.

கடவுளினது நீதியமைந்த விதியினால் நாசத்துக்குள்ளாகிய மானிட ஜாதிக்கு கடவுளின் அன்பு நிறைந்த காருண்யம் தம்மையே பிணையாக்கி அம்மானிட ஜாதியை நீதியின் சிகூைடியினின்றும் மீட்டினதினால் தம்மைக்கறும் அடியார்களும் சேர்ந்து மீட்டப்பட்டார்கள். இக் கிருத்தியத்தினால் மானிடர்களுக்கு இன்னும் அநேக ஆண்டுகள் அநேக ஜென்மங்களெடுத்து உஜ்ஜீவித்திருக்கவும் அதில் இன்னும் அநேக ஆத்மாக்கள் சீர்பாடடைந்து அடியார்களுடைய பகுதியில்ச் சேரவும் அனுக்கிரகித்தார். ஆதலால், தாமே பலியான நேரத்திலிருந்து, நிகழும் தலைமுறைகள் தோறும் மீட்டப்பட்ட ஆன்மாக்களாய் நிகழ்ந்து வருகின்றார்கள்.

I 472