பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணியாளர்களுக்கும், கல்லுரரி நண்பர்களுக்கும் விருந்து கொடுத்து மகிழ்ந்தனர். அன்பளிப்புகள் வழங்கினர், அல்லும் பகலும் தாயினும் சாலப் பரிந்து உணவு படைத்து உவந்தவர்கள், கல்விக் கண்களைத் திறந்து இறைவனது வரப்பிரசாதத்திற்குரிய அறிவு ஒளியை ஏற்றி உள்ளும் புறமும் உலகைக் கானச் செய்த உத்தமர்கள் அல்லவோ அவர்கள் !

பிரிந்து செல்ல வேண்டிய நாளும் வேளையும் வந்தது. "பிரிவினும் சுடுமோ” என்பது மகாகவி கம்பனது வாக்கு. அந்த இரு உள்ளங்களை மட்டும் அல்ல, அவர்களுடன் பதினைந்து ஆண்டுகள் பழகிய பெரியவர்களையும் கூட பிரிவு கட்டது.

வேதனை விரவிய உள்ளத்துடன் அவர்களிடம் பிரியா விடை பெற்றனர். இராமநாதபுரம் வந்து சேர்ந்த பிறகும், பல நாட்களுக்கு பட்டன வாழ்க்கையின் பிம்பம்

அரசகுமாரர்களது நெஞ்சத்தில் படிந்து இருந்தன.

<് Poo

13