பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமையைப் பிறரும் கேட்டு மகிழும் வண்ணம் ஆங்கில கவிதைகளை இயற்றி வழங்கும் கவிஞராகவும் திகழ்ந்தார்.

சென்னை பட்டன வாழ்க்கை இந்த அரசினங்குமாரர்களை வேறு எந்தத் துறையிலும் பெற்றிராத புலமையைக் கல்வித் துறையில் பெறுமாறு செய்தது அவர்களைச் சிறந்த கல்விமான்களாக பக்குவப்படுத்திவிட்டது . தமையனார் தமிழ் இலக்கிய நூல்களில் சிறந்த பாண்டித்யம் பெற்றது போன்று , இளம் தினகர் ஆங்கில மொழிப் புலத்திலும், ஆங்கில இலக்கியங்களிலும் அன்றைய தமிழக மக்கள் யாரும் பெறாத புலமையைப் பெற்று இருந்தார்.

தெய்வ அனுக்கிரகத்திற்கு அடுத்தபடியாக இந்த இளைஞர்களைப் பயிலுவித்த அங்கில நாட்டு ஆசான்களே, இந்தப் பெருமை மிகு பேற்றிற்கு பெரிதும் காரணமாக அமைந்த விளங்கினர். அன்று ஆங்கிலேயர், தாங்கள் ஏற்ற கடமையைச் சிறிதும் குறை ஏற்படாத வண்ணம் பூரணமாகச் செய்து முடித்தனர் என்பதற்கு இந்த அரசகுமாரர்கள் பெற்ற கல்வியே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் . அடுத்து இவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு இராமநாதபுரம் திரும்ப

வேண்டியது தான் .

இராமநாதபுரம் பயனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதே நேரத்தில், உட்லண்ட்ஸ் மாளிகையில், தொடர் , து பல நாட்கள் இந்த அரசகுமாரர்கள் தங்கள் ஆசான்களுக்கும்,

/2