பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா ட் க ள் ஒ டி ம ைற ந் து வ ரு டங்க ள் ஆ யி ன . அரசிளங்குமாரர்கள் தொடக்கக் கல்வியும் கற்று உயர்கல்வியும் கற்று இலக்கியங்களைப் படித்து ரசிக்கும் பாங்கினைப் பெற்றனர்.

பாஸ்கரர் தாம்பரத்தில் உள்ள கிறித்தவக் கல்லுரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். தினகருக்கு பட்டப்படிப்பை விட நுண் கலைகளில் ஆர்வம் மிகுந்து இருந்தது. ஆதலால் இவர் சென்னை எழும்பூரில் உள்ள கலைகள் மற்றும் கைத்தொழில் கல்லுரரியில் சேர்ந்து ஒவியம், சிற்பம், ஆகிய கலைகளைப் பயின்று பட்டயமும் (Diploma) பெற்றார். சென்னை நகர வாழ்க்கையில் ஆங்கில மொழியில் தேர்ச்சியும் புலமையும் பெற்று விட்டாலும், கல்லூரிப் படிப்பின் பொழுதே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல்,ஆங்கில மொழியில் அமைந்த பாடல்களைப் பாடுதல் போன்ற ஒய்வு நேரக்

கல்விகளையும் தினகர் பெற்றார்.

இன்னும் சிறந்த தமிழ்ப் புலவர்களும், சமஸ்கிருத பண்டிதர்களும் உட்லண்ட்ஸ் மாளிகைகளுக்கு வந்து இருமொழி இலக்கியங்களையும் முறையாக கற்றுக் கொடுத்தனர். இவரது முன்னோர்களான சேதுபதி மன்னர்கள் தமிழ், சமஸ்கிருதத், தெலுங்கு இலக்கியங்களைக் கேட்டு ரசித்து, புலவர்களுக்கு பொன்னும் பொருளும் வழங்கும் புரவலராக மட்டுமே சிறந்து விளங்கினர். ஆனால் இளைஞர் தினகரோ, தாம் எய்தியுள்ள மொழிப்புலமையைம் பொருளும் வழங்கும் புலவராக மட்டுமே சிறந்து விளங்கினர், ஆனால் இளைஞர் தினகரோ, தாம் எய்தியுள்ள மொழிப்

II