பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனையில் ஒரு சிறு கீறலை ஏற்படுத்தியது. தங்களது முன்னோர்களான சேது மன்னர்களது வழியில் சிறந்த கொடையாளியாக தமையனார் பாஸ்கரன் இருந்து வந்தது தினகரனுக்கு பொறாமையை ஏற்படுத்தவில்லை. ஆனால் வருவாய் கருங்கிய நிலையில் உள்ள இராமநாதபுரம் சமஸ்தானத்தின் நிதி நிலையைப் பற்றி தினகர் கவலைப்பட்டார். குந்தி இருந்து சாப்பிட்டு வந்தாலே குன்று போன்ற செல்வமும் அழிந்து விடும் என்று உலக வழக்கு இருக்கும் பொழுது வரையற்ற தானம், அளவுக்கு மிகுதியான செலவுகள் சமஸ்த்தான நிர்வாகத்தை நிலை குலையச் செய்து விடும். மன்னரை நம்பியுள்ள மக்கள் மற்றும் தமது தங்கைகள் ஏன்

தம்முடைய எதிர் காலம் என்ன ஆவது ?

չ%).ւն) . 1 893 ஆம் ஆண்டு பாஸ்கரது நாட்குறிப்புகளின் முந்தைய மூன்று ஆண்டுகளில் நாற்பத்து நான்கு லட்சத்திற்கும் மிகுதியான ரூபாய் அளவிற்கு கொடைகள் வழங்கியிருப்பதை குறிப்பிட்டுள்ளது. தினகரது உறவினர்களில் ஒரு சிலரும் நண்பர்களும், தினகரது இந்த சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொண்டார்கள். அவ்வளவு தான் ! அந்தச் குறுமதியாளர்கள் தயாராகி விட்டனர்.

தினகரரது பிஞ்சு மனதில் பேதகமான நஞ்சினைப் பெய்து சகோதர உறவுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பிளவை ஏற்படுத்திப் பேருவகை கொள்வதற்கும் ஆயத்தமாகினர். அவர்களது முயற்சி மதுரையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில், இராமநாதபுரம் சமஸ்தான

I5