பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவியத்திற்கு வித்திட்டனர் . லண்டனில் உள்ள பிரிவி கவுன்சில் என்ற உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்று விடலாம் என்று உறுதி சொல்லி பல உதாரணங்களைக்

காட்டினர்.

மன்னர் பாஸ்கரர் தமது தம்பியின் நேர்மையற்ற தவறான போக்கு பற்றி ஏற்கனவே தமது நாட்குறிப்பில் மிகுந்த வருத்தமுடன் வரைந்திருந்தார் . இப்பொழுது தீயவர்களது துரண்டுதலில் தம்பி மேலும் கடனாளியாக சிரமப்படவிருப்பதை தவிர்ப்பதற்கும் அவரைச் சூழ்ந்திருக்கும் சுயநலக் கூட்டத்திலிருந்து அவரைவிடுவிப்பது பற்றியும் ஆழமாகச் சிந்தித்தார் . தம்பி தினகரரது இளம் உள்ளத்தில் ஏற்பட்ட நியாயமான பயத்தையும் அதனால் அவர் வழக்கு மன்றம் சென்று தனக்கு எதிராக தீர்ப்புரை பெற முயன்றதையும் மன்னர் பெரிதுபடுத்தி வெறுப்புணர்வு கொள்ளாமல் இந்தப் பிரச்சனைக்கு எவ்விதம் தீர்வு காணலாம் என்பதையே எண்ணி எண்ணி வருத்தப்பட்டார். முடிவான தீர்வு ஒன்றையும் விரைவில் கண்டார். என்ன இருத்தாலும் இளம் தினகர் அவருடன் பிறந்த தம்பியல்லவா ? தனது திவான் ராஜராம் ராவ், மூலம் தம்பிக்குச் செய்தி அனுப்பி நேரில் அவரை சந்திக்குமாறு செய்தார். தமையனும் தம்பியும் சந்தித்தனர். கலந்துரையாடலில் இருவரும் மனம் விட்டுப்பேசினர். பாசமும் பற்றும் இணைந்த இருவரது சிந்தனையும் ஒரு முகமாகச் செயல் பட்டதால் அவர்கள் எளிதில் ஒரு நல்ல முடிவுக்கு வந்தனர். தம்பியின் அனாவசியமான பயத்தைப் போக்கும்

வகையில் அவரது வாழ்வுக்கு வழி வகுத்துக்

17