பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் பதவியில்

இராமநாதபுரம் சமஸ்தானப் பொறுப்புகளை சமஸ்தான திவான் தலைமையிலான குழு ஒன்றிடம் ஒப்படைத்துவிட்டு மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் ஆன்மீகத் தொண்டுகளில் மிகுதியான நேரத்தைச் செலவழித்து வந்தார். மிகப்பெரிய வேதாந்தியான அவரது உள்ளத்தில் அமைதி இல்லை. முந்தையபன்னிரண்டு ஆண்டுகளில் பாடிவந்த புலவர்களுக்கும் நாடிவந்த நலிவுற்றோருக்கும் ஈந்து உவந்த வந்த இரு கரங்களுக்கு இப்பொழுது பெரும்பாலும் வேலை இல்லை. குன்றனைய செல்வம் குன்றிவிட்ட பிறகு கொடைக்கு வழி ஏது? இல்லையென்ற சொல்லைச் சொல்வதற்குப் பயந்த மன்னர்

ஏகாந்தத்தை நாடினார்.

அதே ஆண்டில் இறுதி வாக்கில் தமது மனைவி சிவகாமிகந்தரி நாச்சியாருடன் மாமனார் ஊர்க்காடு

ஜமீன்தார் மாளிகைக்கு சென்று

21