பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தார். அங்கும் அவருக்கு தேவையான மனஅமைதி ஏற்படவில்லை. அந்த ஜமீனை ஒட்டிச் செல்லும் தாமிரபரணி ஆற்றின் எதிர்க்கரையில் இருந்த கல்லிடைக்குறிச்சி திருவாடுதுறை திருமடத்திற்குச் சென்றார். அங்கு இவருக்கு தேவையான அமைதி கிடைத்தது. பூஜை, பாராயணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஒன்றியிருந்த அவரது முதுகில் (ராஜா பிளவை) கட்டி ஒன்று தோன்றி உபாதையளித்துக் கொண்டிருந்தது . அதனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தெய்வ சிந்தனையை மட்டும் முழ்கி இருந்த அவருக்கு திடீரென 27-12-1903ம் தேதி முற்பகல் மரணம் ஏற்பட்டது. அவரது சடலம் இராமநாதபுரம் கொண்டு வரப்பெற்று

30-12-1903ல் ராஜமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அப்போழுது சென்னையில் இருந்த தினகரருக்கு தந்தி முலம் செய்தி தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் சென்னையில் இருந்து இராமநாதபுரத்திற்கு நேரடியான ரயில் போக்குவரத்து கிடையாது. சென்னையிலிருந்து புறப்படும் ரயில் ஈரோடு வழியாக மதுரை வந்தடைய இருநாட்கள் ஆகும். பின்னர் மதுரையில் இருந்து குதிரை பூட்டப்பட்ட கோச்சில் இராமநாதபுரம் வந்து சேர இரு நாட்கள் ஆகும். இவ்விதம் மிகவும் தாமதமாக வந்து

சேர்ந்த இளவல் தினகர், தயரதச் சக்கர வர்த்தியை இழந்த அயோத்தி மாநகரம் போன்று மீளாத சோகத்தில் இராமநாதபுரம் முழ்கியிருப்பதை உனந்தார். மிகப்பெரிய வேதாந்தியாக, சிறந்த மேதையாக, வரையாது வழங்கிய வள்ளலாக, வாழ்ந்த தமது தமையனாரை

22