பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் ஆட்கொண்டதை உணர்ந்தபொழுது தினகர் துயரத்தில் சிறிது காலம் முழ்கி இருந்தார். 'ஊழிற் பெருவலியாவுள" என்ற வள்ளுவம் அவருக்கு ஆறுதல் அளித்தது.

முடி சார்ந்த மன்னரும் முடிவிலொரு பிடி சாம்பலாவர் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.

கணவரை இழந்த அரச பிராட்டிகள், தந்தையை இழந்த மக்கள் ராஜேஸ்வர முத்துராமலிங்கம், ராஜராம் பாண்டியன் இவர்களுக்கு ஆறுதல் சொல்வது யார்? இவைகளுக்கெல்லாம் மேலாக ஸ்தம்பித்து நின்றது சமஸ்தான நிர்வாகம். சேதுபதி மன்னராகப் பட்டம் சூட்டிக் கொண்ட இளைஞர் முத்து ராமலிங்க சேதுபதிக்கு திவானாக கெளரவப் பொறுப்பை ஏற்று சமஸ்தான செயல்பாடுகளுக்கு உதவி வந்தார் தினகர் அனுபவமும் ஆற்றலும் மிக்க இந்த சேவையை தமது தமையனாருக்குச் செய்யும் ஆற்றலும் நன்றிக் கடனாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்து வந்தார்.

என்றாலும், தமையனாருடன் இளமைக்காலம் தொட்டு சென்னையில் ஒன்றாகப் பயின்றது , பயனுள்ள காலமாக பதினைந்துஆண்டுகள் சென்னையில் கழித்தது. ஆங்கில, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழி இலக்கியங்களைக் கற்றுக் தெளிந்தது. ஒவியக் கலையில் உன்னதமான தேர்ச்சி பெற்றது. அதே போல ஆங்கில இசையில் முழ்கித் திளைத்ததுடன் தமையனார் பாஸ்கரருக்கும் போட்டியாக பியானொ இசைக் கருவியை மீட்டிக் கேட்போர் இதயத்தை ஈர்த்து இழுத்து இசை நயத்தில் திக்குமுக்காடச் செய்து மகிழ்தல் இப்படி

23