பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்டு வண்டியில் ராஜதுர்யமடை கிராமம் வரை வந்த பிறகு அங்கிருந்து சக்கரக்கோட்டைக் கண்மாயைப் படகு மூலம் கடந்து, கண்மாயின் வடக்குக் கரைக்கு (இராமநாதபுரம் நகர்) வந்து சேர்ந்தவுடன் மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஏற்பாட்டின் படி சுவாமிகளை மன்னரது பிரதிநிதியாக தினகர் வரவேற்று அலங்காரப் பல்லக்கில் அமரச் செய்து, வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக இராமநாதபுரம் சங்கர விலாஸ் மாளிகைக்கு

அழைத்து வந்தார்.

சுவாமிகள் களைப்பு நீங்க சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்ட பிறகு மன்னரும் இராமநாதபுரம் நகர் மக்களின் சார்பாக வரவேற்பு இதழ் ஒன்றை வாசித்து அளிக்கும் வாய்ப்பினை தமது இளவலுக்கு பாஸ்கர சேதுபதி மன்னர் அளித்தார். கல்வியிலும் வயதிலும் முதிர்ந்த, பாஸ்கரர் தினகர் ஆகியோரது உடன் பிறவாத சகோதரர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர், மன்னரது ஆசானும் நண்பருமான மகாவித்வான் ரா.ராகவஜயங்கார் சமஸ்தான இசைப்புலவர் பூச்சி சீனிவாச ஐயங்கார் போன்ற மேதைகள் இந்த வரவேற்பு விழா எற்பாடுகளில் பங்கு கொண்டு இருந்ததும் இந்த வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை .

இந்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் தினகர் அவர்களால் வரையப்பட்டு ஒரு அழகிய வெள்ளிப் பேழையில் வைத்து மிகுந்த மரியாதையுடன் வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. (இந்த வரவேற்பு இதழில் நகல் பிண்ணினைப்பில் கொடுக்கப்பட்டது.

25