பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் இறந்த பிறகு மிகப் பெரிய துன்பம் ஏற்பட்டது. இராமநாதபுரத்தில் சமஸ்தானத்தின் கெளரவ திவானாக பணியாற்றிய போதிலும், அவரது வாழ்க்கையிலே எந்த விதமான ஈர்ப்போ அல்லது பிடிபாடோ இல்லாத நிலையில் வாழ்க்கை கழித்து வந்தது .

மேலும் அவரது பெரும்பாலான நேரத்தை பியானோ இசைத்தும் பாடுவதிலும், ஆங்கிலத்தில் கவிதை இயற்றுவதிலும் செலவழித்து வந்தார். சில வேளைகளில் வெளியூர்களிலிருந்து வந்து தம்மைச் சந்திக்கும் தமிழ்ப் புலவர்களுடன், வடமொழி வித்தகர்களுடன், அளவலாவுவதும் அவர்களுக்கு தக்க சன்மானம் அளித்து அரண்மனை மரியாதையுடன் அனுப்பி வைக்கும் பழக்கமும் அவரிடமிருந்தது . மன்னர் பாஸ்கர சேதுபதி இல்லாத குறையை இவர் இவ்விதம் நிவர்த்தி செய்து வந்தார் என்றால் மிகையாகாது . இது தவிர குதிரைகளை வளர்த்து பராமரிப்பதிலும் கவனம் செலுத்திவந்தார் . இளமையிலிருந்தே குதிரைகள் மீது இவருக்கு ஒரு அலாவதியான பற்று இருந்து வந்தது .

அவரது இளமைப்பருவம் சென்னையில் கழிந்தது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம் . சென்னையில் அவருக்கு வாழ்க்கைக்கல்வியில் போதனையும் பயிற்சியும் அளித்த ஆங்கில நாட்டு ஆசான்கள், அவருக்கு சிறந்த அரபிக் குதிரைகளை அடக்கிச் சவாரி செய்வது எவ்வாறு என்பது மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்து இருந்தனர் அரசகுமாரர்களுக்கு குதிரை ஏற்றம் தெரிந்து இருக்க வேண்டும் என்பதை வழிவழியாக வந்துள்ள நியதி

26