பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லவா ? குதிரையில் சவாரி செய்யும் பொழுது அவர் தலையில் அணிந்திருந்த தொப்பியோ அல்லது வேறு சிறு பொருட்களோ அவரிடமிருந்து கீழே விழுந்து விட்டால் , அதனை சிரமமில்லாமல் மிகவும் லாகவமாக , குதிரையின் வேகத்தைக் குறைக்காமலேயே கையிலுள்ள சவுக்கு மூலம் மிக எளிதாக அந்தப் பொருளை எடுத்து விடுவது அவரது அரிய பழக்கமாயிருந்தது .

இவர் குதிரை சவாரி செய்வதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த ஆங்கிலேய அலுவலர்கள் அவரது திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அத்துடன் இராமநாதபுரம் கோட்டையில் அப்பொழுது நிலை கொண்டு இருந்த ஆங்கில அரசின் நான்கு குதிரைப் படை அணிகளில் ஒரு அணிக்கு, அவரை கெளரவத் தலைவராக அன்றைய அரசாங்கம் நியமனம் செய்து சிறப்பித்தது. பகது.ார் என்ற பட்டத்தையும் குதிரைத் தளபதிக்கான அழகான ஆடம்பரச் சீருடையையும் ஆங்கிலஅரசு அளித்து கெளரவித்தது.

பல் நூற்றாண்டுகளாக குதிரைகள் அரசியல் சமுதாய வாழ்வில் சிறப்பான இடம் பெற்று இருந்ததைப் புராணங்களிலும் , இதிகாசங்களும் எடுத்துரைக்கின்றன. வேதகால ஆரியர்கள் குதிரைகளை யாகத்தின் பொழுது பலியிட்டனர் என்ற செய்தியுள்ளது . மன்னரது வீரபராக்கிரமத்தை நிலை நாட்ட குதிரையை வைத்து அசுவமேத யாகம் நடத்தப்பட்டது . .யாக முடிவில் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரை நாடு முழுவதும் வெற்றி உலாவாக அழைத்துச் செல்லப்பெற்றது இராமாயணத்தில் பிற்பகுதியான உத்திரகாண்டம்

27