பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமபிரானது அசுவமேதயாகத்தையும், அந்த யாகத்தின் முடிவில் வெற்றி உலா புறப்பட்ட குதிரையை மடக்கிப் பிடித்துக் கட்டிய லவ, குச சகோதரர்களைப்

பற்றியும் விவரிக்கின்றன .

ஆனால் இந்தச் குதிரைகள் நமது நாட்டில் பல்கிப் பெருகவில்லையென்பதும், அரேபியா போன்ற நாடுகளில்

இருந்து வரவழைக்கப்பட்டன என்பதையும் இலக்கியங்களும், வரலாறும் தெளிவுபடத் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரையில்

குதிரையைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியமான பொருநர் ஆற்றுப்படையில் காணப்படுகிறது. தகடுரைத்

தலைமையிடமாகக் கொண்டிருந்த வள்ளல் அதிகமானது

மலைகளில் ஒன்று குதிரை I_ _ _ என்பதும் தெரியவருகிறது. மற்றும் தமிழ் மன்னர்களது நால்வகைப்

படைகளில் ஒரு அங்கமாக குதிரைப்படையும் இருந்தது . அரசகுமாரர்கள் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டிய கல்வியில் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்தி நான்கு கலைகளில் ஒன்றாக "குதிரைஏற்றம்” ஒரு கலையாக இருந்து வந்தது.

மதுரையில் மன்னர் அரிமர்ததனுக்காக கிழக்கு கடற் கரை சென்று அரபு நாட்டுக்கு திரைகளை வாங்க பாண்டியனிடம் பொன்னைப் பெற்றுச் சென்ற மாணிக்க

வாசகரை திருப்பெருந்துறையில் ஆளுடையப்

28