பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரமசுவாமிக்கு அந்தப் பொன்னைக் கொண்டு திருப்பணி செய்தார் என்பது எட்டாம் நூற்றாண்டு வரலாறு பரஞ்சேதி முனிவர் தன் திருவிளையாடற்புராணத்தில், அரபு நாட்டில், மக்கம் போன்ற நகரங்களில் குதிரைகள் கிடைப்பதையும், குதிரைகளின் இனம், வகை, குணநலன்கள் ஆகியவை பற்றி நரியை பரியாக்கிய படலத்தில் விவரமாகப் பாடியுள்ளார். தொடர்ந்து இந்த சிறப்பான வகைக் குதிரைகள் கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் முற்பகுதி

வரை பாண்டிய நாட்டில் காயல்பட்டினம், பெரிய பட்டினம், தேவிப்பட்டினம், ஆகிய மூன்று துறைமுகங்களில் ஆண்டு தோறும் பதினாயிரம் குதிரைகள் இறக்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர் வஸ்ளலாபும், மார்க்கோபோலோவும் வரைந்துள்ளனர் இவ்விதம் பெரியபட்டிணம் துறையில் கரை இறக்கப்பட்ட குதிரைகள், பாண்டியனது தலைநகரான மதுரைக்கு வழி நடத்திச் சென்ற பாதை, இன்னும் "குதிரை வழிக்காடு” என வழங்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தக் குதிரைகளை கொங்கு நாட்டு மலை மண்டலம் வழியாக மேற்குக் கடற்கரையிலிருந்து கொண்டு வந்து விற்ற வணிகர்கள் "குதிரைச்செட்டிகள் +7 என வழங்கப்பட்டதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்தக் குதிரைகளுக்கு ஏற்படும் பிணிகளைத் தீர்க்கவும், அரபு நாட்டில் இருந்து யூனானி வைத்தியர்கள் குதிரைகளுடன் வர வழைக்கப்பட்டனர் என்பது தெரிய

வருகிறது .

29