பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேது நாட்டு

தேசிங்குராஜா

த்மிழ் நாட்டில் பேரரசர்களும் சிற்றரசர்ககளும் அவர்களது அந்தஸ்திற்கு ஏற்றாற் போல குதிரைகளை வைத்து வளர்த்து பராமரித்து வந்தனர். பத்தொன்பதாவது நாற்றாண்டில் இறுதியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மன்னர்களது மாளிகைகளில் மட்டும் சிறந்த குதிரைகள் காணப்பட்டன. ஒரு நாள், ஒரு குதிரை வியாபாரி இரு அரபு நாட்டுக் குதிரைகளை இராமநாதபுரம் சேதுபதி மன்னரது அரண்மனைக்குக் கொண்டு வந்தார். அரபு நாட்டுக் குதிரைகளுக்கே உரிய களையுடன் அந்தக் குதிரைகள் அழகாக இருந்தன. உரிய விலையைக் கொடுத்து மன்னர் பாஸ்கர சேதுபதி அவைகளை வாங்கி தமது அரண்மனை குதிரை லாயத்தில் சேர்ப்பித்தார்.

37