பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினகரருக்கு புரிந்து விட்டது. இது வரை யாரும் அதனை சவாரியில் பழக்கப்படுத்தவில்லை. அதனால் குதிரை தம்மைத் தொடுவதற்கு கூட அனுமதிக்க மறுக்கிறது. அடுத்த நாள் அதனை ஒட்டிச்சென்று அடக்குவதாகச் சொல்லிச் சென்று விட்டார்.

ն> Ա2յ நாள் காலையில், இராமநாதபுரம் அரண்மனையின் தெற்குப் பகுதியில் அமைந்து இருந்த குதிரை லாயத்தின் முன்பு அரண்மனைப்

பணியாளர்களும் பொதுமக்கள் சிலரும் கூடி இருந்தனர் . பேய்க் குதிரையை தினகர் அடக்குவதைக் பார்க்க சிறிது நேரத்தில் தினகரும் அங்கு வந்தார். ஆங்கிலேயக் குதிரை வீரன் போல அழகிய வண்ண சட்டையும், வெள்ளை நிற கால் சட்டையும் பூட்சுகளும் அணிந்து மிகவும் சிரமப்பட்டு குதிரையின் கடிவாளத்துடன் பிணைக்கப்பட்ட நீண்ட

கயிற்றை தினகரிடம் கொடுத்தனர் .

கடிவாளக் கயிற்றைப் பெற்றுக் கொண்ட தினகர். குதிரையை லாயத்தை விட்டு வரச் செய்வதற்கு கயிற்றை இழுத்தார். குதிரை வர மறுத்தது.

குதிரை அருகில் சென்று, அதன் முதுகில் தட்டிக் கொடுத்து கொண்டு இருக்கும் பொழுது திடீரெனத் தாவி அதன் மீது அமர்ந்து கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தார். கூட்டத்தினரை விலகி நிற்குமாறு சொல்லிவிட்டு சவுக்கினால் குதிரைக்கு இரண்டு சொடக்கு விட்டார். குதிரை கோபத்துடன் அவரைக் கீழே தள்ளி விடத் திமிறியது. கடிவாளத்தை இறுக்கமாகப் பிடித்து

33