பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதிரையின் இரு விலாப்புறத்திலும் இரு முன் கால்களால் அழுத்தி குதிரையை அங்கிருந்து ஒடுமாறு செய்தார். கூடியிருத்தவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர். தினகரது குதிரையை நான்கு குதிரை வீரர்கள் பின் தொடர்ந்தனர். திமிறிக்கொண்டு ஒடிய அந்தக் குதிரையை வீரர்கள் மேற்கு நோக்கி ஒடுமாறு விரட்டினர். சிறிது துரத்தில் உள்ள பெரிய அய்யனார் கோயிலுக்கு முன்னால் அன்றைய மழையினால் வதியாக கிடந்த களிமண் பகுதிக்கு அதனை ஒட்டிச்சென்றார். ஈரமாக இருந்த அந்தக் களிமண் தரையில் சுற்றி வருமாறு விரட்டி ஒட்டினார். ஏறத்தாழ இரண்டு மணி நேரம், அதுவரை மேட்டிலும், மனலிலும் கடந்து ஒடிய அந்தக் குதிரைக்கு இது ஒரு சிரமமான சோதனையாக இருந்தது.

சுற்றிச் சுற்றி ஒடி வந்த அந்தக் குதிரை களைத்து சோர்ந்து போயிற்று. காலையில் புல்லோ கொல்லோ எதுவும் உட்கொள்ளாமல் ஒடி வந்ததால் குதிரைக்கு பசியும் களைப்பும் வருத்தியது. கோடை காலம் வெய்யிலின் உக்கிரம், எல்லாம் சேர்ந்து குதிரையைத் தள்ளாட வைத்தது. சிறிதும் களைப்படையயாத தினகர், குதிரையை மேலும் வருத்த விரும்பவில்லை.

களிமண் தரையில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்த தினகர் கடிவாளத்தின் இறுக்கத்தை தளர்த்தி அதனை சற்று நிறுத்தினார். பேய் போல அதனைப் பற்றி இருந்த திமிர், முரண்டு, பிடிவாதம் எல்லாம் பறந்து போயிற்று சிறிது மூச்சு வாங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. தினகர் அதன் கழுத்தில் தட்டிக்

34