பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த மாளிகை வாசம் தினகருக்கு மன அமைதி தருவதாக

ക്ലാസ്മോ.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமையனார் பாஸ்கரசேதுபதி ஒதுக்கீடு செய்த மனையிடத்தில் தமது மாளிகையை அமைத்து அதில் வாழ வேண்டும் என ஆசைப்பட்டார். இந்த மாளிகையை ஒரு புதிய பாணியில் அழகும் கற்பனை நயமும் கலந்த அழகுப் பெட்டகமாக அமைக்க வேண்டும் என இரவு பகலாக அந்த மாளிகை அமைப்பை பற்றியே சிந்தித்து வந்தார். அதுவரை சேதுபதி மன்னர்கள் கையாண்ட கட்டுமான கலை உத்தியில் இருந்து வேறுபட்டதாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்பினார். இதற்காக சென்னை சென்று அவரது நண்பர்களையும் கட்டுமானப் பொறியாளர்களையும் சந்தித்து புதிய உத்திகளைப்பெற்று புதிய பாணியில் கட்டுமானம் அமைக்க முயன்றார்.

இந்த மாளிகையின் முகப்பில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள திண்ணைச் சுவர்களில் அஷ்ட லக்ஷிமிகளின் எட்டுவகையான தோற்றம் ஒவியங்களாக திட்டப்பட்டு இருந்தால் இந்த மாளிகை லக்ஷிமி விலாசம் என பெயர் பெற்றது.

அவர் மாளிகையை அமைக்க அவருக்கு

வழங்கப்பட்ட மனை இராமநாதபுரம் கோட்டை வாசலில்

இரு ந்து ஒரு ப ர்லாங்கிற்கும் சற்று கூடுதலான

40