பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைக் கனவு

இளைஞர் தினகரருக்கு ஏற்ற மங்கை நல்லாள், முதுகுளத்துார் வட்டம், கருமல் கிராமத்து பெருந்தனக்காரது பெண் சேதுமுத்து என்பவர் தெரிவு செய்யப்பட்டு தினகரது திருமணம் இராமநாதபுரம் அரண்மனையில் சிறப்பாக

நடைபெற்றது.

இராமநாதபுரம் அரண்மனையில் கிழக்கு நுழைவு வாயிலை அடுத்து தெற்கு நோக்கிய 'லக்ஷ்மி விலாசம்” அ ர ண் ம ைன யி ல் புதுமணத்தம்பதிகளது இல்வாழ்க்கை தொடங்கியது. இவர்களது இல்லறம் சிறப்புற நடைபெற தினகரது தாயார் துரைராஜா லசுஷ்மி நாச்சியார் துணையாக இருந்தார். இராமலிங்க விலாசம் தர்பார் மண்டபம் சேதுபதி மன்னரது இருப்பிடம் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இந்த மாளிகை அமைந்து இருந்தது.

39