பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நாட்களிலேயே தினகருக்கு துப்பாக்கியைக் கையாளுவது பற்றிய பயிற்சி முறையாகக் கொடுக்கப்பட்டு சிறப்பான தேர்ச்சியும் பெற்றார். ஆங்கில நாட்டு நாடோடிக் கதைகளில் சிறப்பித்துக் குறிப்பிடப்படுகின்ற ராபின்குட் என்ற கதாநாயகனுக்கு ஒப்பாகும் வகையில் அவரது குறி தவறுவது கிடையாது. நாடோடி மக்கள் தலைவானான ராபின்குட் தனது வில்லை பிடித்து வைத்து அம்பை இணைத்து குறிவைத்து விட்டால் அந்தக் குறி எந்த நிலையிலும் எப்பொழுதும் தவறுவது இல்லை. ஒரு ஆப்பிள் பழத்தை ஒருவரது தலைக்கு மேல் வைத்து துரரத்தில் நின்று அவர் அம்பை எய்தினால் அந்தப்பழம் மட்டும் அம்பினால் அடித்துச் செல்லப்படும். அதைத் தலையில் வைத்திருந்தவருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தியது இல்லை. ஆப்பிள் பழம் அவரது தலையில் இருந்து அடித்துச்செல்லப்பட்டது கூட அவரால் உணர முடிவதில்லை. இதைப் போன்றே தினகர் தமது துப்பாக்கியைத் துரக்கிப்பிடித்து குறிபார்த்து விட்டால், அந்தத் குறியில் குண்டு பாய்ந்து துளைத்துவிடுவது உறுதி. குறிதவறி குண்டு விழுவது என்பது அவரது அனுபவத்தில் ஏற்பட்டதே இல்லை. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்படலாம் . மாலை நேரங்களில் சூரியன் மேற்கே மறைந்து மங்கிய ஒளிபடாந்து வரும் வேளையில், வானத்தில் அங்கு மிங்கும் பறக்கும் சிட்டுக்குருவியை விட உருவத்தில் சிறிய தையிலான் என்ற குருவியைக்கூட குறிபார்த்து அவர் வீழ்த்தி விடுவது உண்டு. அவரது இத்தகைய குறி தவறாத திறமை மக்கள் வியந்து பேகம் கதைகளுக்கு காரணமாயிருந்தது. <്? Pথ38