பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தா சாகிபும் முறையே ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார் பிரஞ்சு இந்திய கிழக்கு இந்தியக் கம்பெனியார் ஆகியோரது கூலிப் படைகளது உதவி பெற்று நடத்திய போர்களில் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. வெடிமருந்தும் துப்பாக்கிகளும் தான் 18 ஆம் நூற்றாண்டுப் போர்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் ஆயுதங்களாகி விட்டன.

இவ்விதம் தமிழகத்திற்கு முற்றிலும் புதுமையான துப் பாக்கி, அரசாங்கத்தின் பயன்பாட்டில் மட்டும் இருந்தது துப் பாக்கியைத் தினகரது சென்னை வாழ்க்கையின் கற்றுக் கொண்டது ஒரு தற்செயலான நிகழ்ச்சியாக அமைந்தது.

ஒரு நாள் தினகர் கல்வி கற்பதற்காக தங்கியிருந்த உட்லண்டஸ் மாளிகைக்கு அவருக்கு பாடம் சொல்லத்தக்க ஆங்கிலேயேர் ஒரு வரைச் சந்திக்க அவரது நண்பர் ஒருவர் வந்தார். அவரும் ஆங்கிலேயர். சென்னைக் கோட்டையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தவ. அப்பொழுது அவரது கையில் இருந்த நீண்ட குழாய் போன்ற கருவியை உற்றுக் கவனித்த இளம் தினகர், அந்தக் கருவி பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆசைப்பட்டார். அந்தப் பிரமுகரிடம் அடுத்தடுத்த பல கேள்விகளைக் கேட்டு அந்த "துப்பாக்கி” என்ற ஆயுதத்தை பற்றி தெரிந்து கொண்டார்.

அந்தப் பிரமுகர் அங்கிருந்து சென்றவுடன் தானும் அந்த ஆயுதத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆசையைத் தனது ஆசானிடம் தெரிவித்தார். அடுத்த

37