பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகுத்தோற்றம். ஏதோ ஒரு கற்பனையின் வீச்சு அதில் பிரதிபலித்தது. சதுரத்தைவிட சற்று பெரிய வடிவம் அகலத்தைவிட சற்று கூடுதலான நீளம். கீழ் மேலாகச் செல்லும் கோட்டைப்பாதையை அடுத்து தெற்கு நோக்கிய முகப்பு. அகலமும் உயரமும் மிக்க மூன்று நுழைவாயில்கள். கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் ஒன்றாக மூன்று வாசல்கள். இந்த மூன்று வாசல்களை யுடைய தெற்குப்பகுதியில் கிழக்கு மேற்கு முனைகளில் அறு சதுர வடிவில் தனி அறைகள். இந்த அறைகளில் இருந்து கிழக்கிலிருந்து மேற்கிலும், மேற்கிலிருந்து கிழக்கிலும் மாளிகையின் ஊடே செல்லத்தக்க வழிகள். இதனைப் போன்று முகப்பு வாசல்களில் இருந்து வடக்கே பின்புறம் செல்ல வழிகள். அதுமட்டுமல்ல மாளிகையின் உட்புறம் காற்று வசதி இருப்பதற்காக ஒரு அறைக்கும் மற்ற அறைக்கும் இடைப்பட்ட சுவர்களில் இலைவடிவ இடைவெளி.

கூடங்களிலும், அறைகளிலும் ஆங்காங்கே தேவ மாடங்கள் போன்ற அமைப்பு. இந்த அழகிய மாடங்களில் குதிரைகள், குதிரைகளுடன் வீரர்களது உருவங்கள், கண்ணைக்க்வரும் வண்ணங்களில், தினகரருக்கு குதிரைமீது இருந்த தாளாத அன்பு, காதல், பாசம் பற்று இவைகளின் பிரதிபலிப்பு இந்த குதிரை பொம்மைகள்.

இந்த அமைப்பில் மேல் மாடியொன்றும்

அமைக்கத்திட்டமிட்டு இருந்தார். ஆனால் மாடியின்

நடுப்பகுதியில் மட்டும் கட்டும்ானம் அமைந்த இந்த

திட்டம் நிறைவுபெறவில்லை என்பது தெரிகிறது.

இன்னும் மாளிகையின் மேல்தளத்தில் உள்ள அமைப்புகள்

42