பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனை கட்டிக்காட்டுவனவாக உள்ளன. மேலும் இந்த மாளிகையின் நிலைகள், சாளரங்கள் மாளிகைக்கு உள்ளும் வெளியும் குதிரை லாடத்தை ஒத்த வளைவுகள், பதிமூன்றாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டு கார்டோபா சிவிலி ஆகிய நகர மாளிகைகளை அமைக்க ஸ்பெயின் நாட்டு முஸ்லீம் மன்னர்கள் கையான்டவைகளை ஒத்து இருக்கின்றன. மொத்தத்தில் இந்த மாளிகை அமைப்பு கற்பனைகளும் கலைத்திறமையும் மிகுந்த ஒரு இளம் உள்ளத்தில் எழுந்த இனிய கவிதைக் கனவு போன்ற ஒரு முன்மாதிரியான அமைப்பு என்றே கொள்ளுதல் பொருந்தும்.

இந்த மாளிகையின் தோற்றத்திற்கு வலிவும், பொலிவும் ஊட்டும் வகையில் அதன் சுற்றுச்சூழலும் அழகும் இனிமையும் தவழும் வகையில் பல புதிய மணம் வீசும் மலர்களைத்தருகின்ற மரக்கிளைகளையும் செடி கொடிகளையும் சென்னையில் இருந்தும், கோடைக்கானலில் இருந்தும் வரவழைத்து மாளிகையின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் தி டபுெ செய்து வளர்க்கப்பட்டன. நாலைந்து ஆண்டுகள் இந்த மாளிகை முற்றுப்பெற்ற பொழுது, மாளிகையைச் சுற்றிலும் வண்ண மலர்களைத் தாங்கிய செடிகள், கொடிகள், சரம்சரமாக மஞ்சள் பூக்களைத் தொடுத்து வைத்தாற் போல காட்சியளிக்கும் சரக்கொன்றை மரங்கள், மிகவும் அடர்த்தியான இலைகளுக்கிடையில் கொத்துக் கொத்தாக மனம் வீசும் மகிழம்பூ மலர்கள், உயர்ந்த தேவதாரு மரங்களின் கிளைகளில் وات مع வைத்தது போன்று தொங்கும். நீண்ட காம்புகள் இந்த மலர்களில் இருந்து மிக மென்மையாக வீகம் மனம் இன்னும் எத்தனையோ

43