பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேனாவும் நோட்டு புத்தகமுமாக அவர் வந்து நிற்பார். தினகர் சொல்வதை மிகவும் அக்கறையுடன் எழுதி இறுதியாகப் படித்துக்காண்பித்து அவரது ஒப்புதல் பெறுவார். சரி இப்பொழுது எதைப் பற்றிய நூல் எழுதுவது ? விரைவிலேயே ஒரு முடிவிற்கு வந்தார்.

சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமியை ஏற்றிப் போற்றும் இயல்பினர். வாழையடி வாழையாக வந்த சிவ நெறிச் செல்வர்கள். ஆனால், இவரது தந்தையார் துரைராஜா முத்து ராமலிங்க சேதுபதி மட்டும் இவர்களது முந்தையோர்களுக்கு விலக்காக மிகச் சிறந்த முருக பக்தராக விளங்கினார். " முருகனைத் தவிர வேறு

לר

ஒரு பேயை விளம்புதிரேல் என வெறிபிடித்தவர் போல பாடியிருப்பவர். அவர் பாடிய பர்ட்டு

சிற்றிலக்கியங்களில் இரண்டு குமரக்கடவுள் பற்றியது .

இவ்விதம் சிறந்த முருக பக்தரான தந்தையாரைப் பின் பற்றி முருகக் கடவுள் பற்றிய ஆய்வில் தோய்ந்தார் . முருகனைப் பற்றி தமிழ் இலக்கியங்களை ஏற்கனவே நன்றாக படித்து இருந்தார். குறிப்பாக அருணகிரிநாதர் இசையொடு அமைந்து இனிமையைப் பயக்கும் திருப்புகழ் பாடல்களுக்கு இணையான தமிழ்ப்பாடல்கள் இல்லைதான். ஆதனால் இவர் தமது கடவுள் சிந்தனைகளை தாம் கற்ற சமஸ்கிருத நூல்கள், திருக்குறள், தேவாரம், திருப்புகழ், சோதிட சாஸ்திரம் போன்ற அரிய நூல்களின் ஆதாரங்களைக் கொண்டு எழுதினார் . இந்த சிந்தனைக் களஞ்சியம் ஆங்கிலம், தமிழ், ஆகிய இரு மொழிகளில் வரையப்பட்டன. தமிழில் 'இந்து LD5

רוד

கட்கமம் ” என்ற தலைப்பில் இந்த நாலின் முதல் பகுதி

53