பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர் மரணமடைவதற்கு சரியாக நான்கு மாதங்களுக்கு முன்னர் அச்சிட்டு கி.பி.1942ல் வெளி வந்தது. அடுத்த பகுதிகள் அச்சில் வந்தனவா என்பதை அறிய

முடியவில்லை.

இதனைப் போன்றே இவரது முருகக் கடவுள் பற்றிய ஆங்கில வெளியிடும் அச்சில் வந்த விவரம் தெரியவில்லை. இந்த தொகுப்பிற்கு “THE PRABANDAM OR LORD MURUGA ” எனப் பெயரிட்டு இருந்தார். இந்த நூலைத் தினகர் சொல்லச் சொல்ல தான் அதனை முழுமையாக எழுதி முடித்ததாக இன்றும் உயிரோடு இருக்கும் மூதாட்டி குஞ்சரம் நாச்சியார் அவர்கள் தெரிவிக்கிறார்கள். தினகரது இலக்கிய அனுபவம், அவர் கற்றறிந்த நூல்களில் நுண் மான் துழை புலமாகவும் தமிழகத்தில் சங்க காலத்தொட்டு தொடர்ந்து வரும் குமரக் கடவுளது வழிபாடு பற்றிய ஆய்வாகவும் அமைந்த இந்த நூல் நமக்குக் கிடைக்காமல் போனது இலக்கிய உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகக் கருத வேண்டியுள்ளது.

தினகர் இறக்கும் தருவாயில் அவரது தமையனாரது வழித்தோன்றுல்களுக்கும் இடையே நல்ல உறவுகள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடுகள் தொடந்து வந்தன. இதன் பிரதிபலிப்பாக கி.பி.1893ல் மன்னர் பாஸ்கரர் தமது தம்பி தினகரது ஆயுட்காலம் முழுவதும் மாத நிவேதனமாக ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய தொகையை இராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகிகள் கி.பி.1933 முதல் நிறுத்தி விட்டனர்.

தினகர் கண்ணொளி இழந்து அவதிப்பட்ட நிலையில் இராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகிகளது

54