பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III முனைவர் கோ. விசய வேணுகோபால் எம்.ஏ.எம்.லிட்.பி.எச்.டி,

பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனம் பாண்டிச்சேரி - 1

அணிந்துரை

எனது அன்பு கெழுமிய நண்பர் சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் சேது அரசு மரபினர் குறித்துத் தொடர்ந்து எழுதி வருகின்றார். எழுதியவற்றிற்கெல்லாம் பல மதிப்புமிகு பரிசுகளையும் பெற்று வருகின்றார். கண் பழுதடைந்த நிலையிலும் இவரால் எப்படி எழுத முடிகிறது என வியக்கின்றேன்.

தற்போது சேது நாட்டரசர் தினகரர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடுகின்றார். சேது நாட்டு வரலாற்றின் பல முக்கிய பக்கங்கள் இன்னும் தேசிய வரலாற்றின் பகுதிகளாக அமையாமல் உள்ளன. டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களின் பெரு முயற்சியால் இவை இப்பொழுது மெதுவாகப் புலப்படுத்தப்பட்டு வருகின்றன. இம்முறையில் ராஜா தினகர் அவர்களது பன்முக ஆளுமைப் பரிமானங்கள் இந்நூலில் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளன. தினகரர் அவர்களின் இசைப் புலமை பற்றிய செய்திகள் தமிழக இசை வரலாற்று நூல்களில் கட்டாயம் இடம் பெற வேண்டியவை. இதுபோலவே இவரது இலக்கியத்திறன், கலை உள்ளம், நூலறிவு குறிப்பாக இவரது ஆங்கில நூற்புலமை தமிழ் மொழிப் புலமை, கொடை உள்ளம், ஆகியன நன்கு விளக்கப்பட்டுள்ளன.