பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதூர்

விட்டதே: இந்த ராஜ்யத்தில் மனிதருக்கு எவ்விதமான பாது காப்பும் இல்லையே; இன்னம் என்னைப் போல் உள்ள எத்தனை ஏழை ஜனங்கள் இவ்விதமான துன்பங்களையும் துயரங்களையும் அநுபவித்துக் கண்ணிர் விடுத்துக் கலங்குகிறார்களோ தெரிய வில்லையே! சாட்சிகள் இல்லாவிடில் நீதி இல்லையென்றால், நூற்றில் தொண்ணுறு குற்றவாளிகள் தண்டனையில்லாமல் தப்பித்துக் கொள்வது நிச்சயம். திவானுடைய வேலையும் சுலப மானதே. முன் காலங்களில் மகாராஜன் மந்திரி முதலியோர் மாறு வேஷந் தரித்து அடிக்கடி வெளியில் போய் நகரத்தில் ஏதாவது அக்கிரமம் நடக்கிறதாவென்று பார்த்து விட்டு வருவதுண்டு. இப்போது அதெல்லாம் அடியோடு போய் விட்டது. எல்லாம் சட்டப்படியும், சாட்சிகள் சொல்லுகிறபடியும்தான் தீர்மானிக்கப் படுகிறது. இதற்கென்று ஒருவருக்குக் கெடுதல் செய்ய எத்தனிக்கும் துஷ்டர்கள் சாட்சிகள் இல்லாத சமயம் பார்த்துத் தம் கருத்தை நிறை வேற்றிக்கொள்ள மாட்டார்களா? ஒவ்வொரு மனிதனும் எங்கே போனாலும், என்ன செய்தாலும், தன்னோடுகூட இரண்டு மூன்று மனிதர்கள் சாட்சிக்கு அழைத்துக் கொண்டே போக வேண்டும் போலி ருக்கிறது. இந்த மகாராஜன் திவான் முதலியவர்கள் எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட மேதாவிகள் என்று நினைத்துக்கொண்டு தம்முடைய புத்திப் போக்கின்படியே சகலமான காரியங்களையும் நடத்துகிறார்கள். என்னைப் போன்ற ஏழைகளின் சொல் அம்பலத்தில் ஏறுவ தில்லை. நான் போய் இந்த அக்கிரமத்தைச் சொல்லப்போனால், ஏதோ காக்கை குருவி கத்துகிறதாக பாவிப்பார்களே யன்றி, அவர் களைப் போன்ற பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் பேசுகிறதாக எண்ணமாட்டார்கள். இனி நான் என்ன செய்கிறது? என்னுடைய துன்பங்கூட எனக்கு அவ்வளவாக உறைக்கவில்லை. இவ்வளவு பெரிய ராஜ்யத்தில் என்னைப் போல எத்தனை ஆயிரம் எளிய வர்கள் இவ்விதம் கலங்கிக் கேள்வி முறையின்றி வருந்தி உழல் கிறார்களோ தெரியவில்லையே! ஆகையால் நான் இதை இவ்வள வோடு விட்டு விடக்கூடாது. நான் ஏதாவது யுக்தி செய்து ஜனங் களின் குறைகளையும் இடர்களையும் களைய வேண்டும். இதனால் என்னுடைய உயிர் போவதனாலும் அது ஒரு பொருட் டல்ல" என்று பலவாறு எண்ணமிட்டுப் பலவித யுக்திகளையும்

37