பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதூர்

யாருடைய மனசில் அந்த வார்த்தை உறைத்து உடனே பலனைத் தந்தது! ஆகா! உண்மையில் இப்போது யாரைப் பெரிய மனித ரென்று சொல்வது? பணத்தினாலும் பதவியினாலும் செல்வாக் கினாலும் மற்ற இருவரும் பெரிய மனிதர்கள். இந்தப் பாராக்காரன் அன்றாடம் காய்ச்சும் பரம ஏழையாக இருந்தாலும், ஜீவகாருண்யம், அருள், பச்சாதாபம், சமயோசிதமான தானம், தருமம் முதலிய தெய்விகச் செல்வம் நிறைந்திருப்பதால், அவன் தெய்வாம்சம் நிரம்பப்பெற்ற மகா பெரிய மனிதன். ஆகா இந்த மனிதனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! என்னுடைய மனசில் கொந்தளித்துப் பொங்கி எழும் நன்றி விசுவாசப் பெருக்கை நான் எப்படிக் காட்டப்போகிறேன்! நான் பிறருடைய பொருளை எவ்வித உழைப்புமின்றிப் பெறுவதில்லை என்ற உறுதியான வைராக்கியத்தை விரதமாகப் பூண்டிருக்கிறேன். ஆனாலும், எனக்குத் தெரியாமல், அந்த மனிதன் ஏராளமான சாமான்களைக் கொணர்ந்து கொடுத்து விட்டான். உண்மையை அறியாத குழந்தைகள் அவைகளை ஏற்றுக்கொண்டு சொற்ப பாகத்தையும் உபயோகப்படுத்திக் கொண்டன. மிகுதி இருப்பதை நான் எடுத்துக் கொண்டுபோய் அவனிடம் திருப்பிக் கொடுப்பது மரியாதை யாகாது. இருக்கட்டும். காலம் எப்படியும் வரும். அவன் கொடுத்த சாமான்களின் கிரயத்தைவிட நூறுமடங்கு அதிக தொகையை நான் அவனிடம் சேர்த்து விடு கிறேன்' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டவனாய், உள்ளே சென்று ஸ்நானம் சாப்பாடு முதலிய காரியங்களை முடித்துக்கொண்டபின், தான் ஒரு காரி யார்த்தமாக வெளியில் போய்வுட்டு வருவதாகத் தன் மனைவி மக்கள் முதலியோரிடம் கூறியபின் வீட்டைவிட்டு வெளியில் சென்று பல இடங்களிற்குப் போய் அலைந்து திரிந்து கடைசியாக அரண்மனைக்குச் சென்றான். அந்த அரண்மனையிலும், திவானின் மாளிகையிலும் சுமார் இருநூறு பாராக்காரர்கள் வேலை பார்த்து வந்தனராதலால், அவர் அவர்கள் எல்லோரும் தம்முடைய உத்தி யோக உடுப்புகள், டாலி டவாலிகள், பட்டாக்கத்திகள் முதலி யவைகளை வைப்பதற்கு ஒரு பெருத்த விடுதி பிரத்யேகமாக ஏற் படுத்தப் பட்டிருந்தது. அந்த இடத்தில் சேவகர்கள் வருவதும் உடைகளைக் களைந்து வைப்பதும், அவைகளை அணிந்து

40