பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதூர்

திவான்: இந்த வரி எவ்வளவு காலமாய் வசூலிக்கப்படுகிறது? சேவகன்: சுமார் எட்டு வருஷ காலமாய் வசூலிக்கப்படுகிறது. திவான்: இந்த வரியை அந்தத் தாசில்தாரே ஏற்படுத்தினாரா? சேவகன்: அந்த விஷயத்தை நான் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த வரியை இந்த ஊர் திவான் சாகேப் ஏற்படுத்திய தாகச் சொல்லிக் கொண்டார்கள். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். மற்ற விவரம் எதுவும் தெரியாது.

திவான்: அந்தத் தாசில்தாரையும் அவருடைய கச்சேரியையும் எங்களுக்கு நீங்கள் காட்ட முடியுமா?

சேவகன்: ஒl காட்டுகிறோம் - என்றான். அந்த வரலாற்றைக் கேட்ட திவான் மட்டற்ற வியப்பும் கலக்கமும் அடைந்து நடுக்கத்தோடு மகாராஜனைப் பார்த்து, 'மகாராஜாவே! இவன் சொல்வது நிரம்பவும் விபரீதமான தகவலாய் இருக்கிறது. எனக்குக் கீழே இருந்து வேலை பார்க்கும் ரெவினியூ தாசில்தாருடைய கச்சேரி நம்முடைய அரண்மனையின் வட பாகத்திலுள்ள என் கச்சேரியிலேயே இருக்கிறது. இது மேலக்கோட்டை வாசலுக்குப் பக்கத்தில் இருக்கிறதென்று இவன் சொல்லுகிறான். நான் உடனே புறப்பட்டு நேரில் அங்கே போய்ப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொண்டு வந்து சேரு கிறேன். தாங்கள் எனக்கு அநுமதி கொடுங்கள்' என்றார்.

அரசனும் அளவற்ற பிரமிப்பும், கலக்கமும், ஆவலும் கொண்டு 'சரி; நானும் வருகிறேன். அந்த அதிசயத்தை நானும் நேரில் வந்து பார்க்கவேண்டும்' என்று கூறியவண்ணம் தமது ஆசனத்தை விட்டுத் துடியாக எழுந்தார். உடனே திவான் முதலிய மற்றவரும் புறப்பட, ஏராளமான சேவக பரிவாரங்களோடு மகாராஜன் முதலியோர் மேலக்கோட்டை வாசலுக்கு அருகில் போய்ச் சேர்ந்தனர். சுடுகாட்டுச் சுங்கன் சாவடிச் சேகர்கள் அவ் விடத்திலிருந்த ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தைக் காட்ட, அதற்குள் திவான் முதலிய எல்லோரும் நுழைந்தனர். அந்தக் கட்டிடம் வெளிப்பார்வைக்குச் சிறியதாகக் காணப்பட்டதானாலும், உள்பக்கத்தில் அது ஒரு பெருத்த அரண்மனைபோல அரைக்கால்

61