பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதூர்

பெற்றுக்கொண்டதாக அவருடைய கையெழுத்து முகர் உள்பட ரசீது வந்து சேரும்.

திவான்: (முற்றிலும் கலங்கி பிரமித்துப்போய்) இந்த ஒன்பது வருஷ காலமாய் திவானுக்கு அனுப்பப்பட்டதொகைகளின் மொத்தம் எவ்வளவு? அவரால் அனுப்பட்ட ரசீதுகள் எங்கே?

தாசில்தார்: (கணக்கைப்பார்த்து) இந்த ஒன்பது வருஷ காலத்தில் திவான் சாயப் கச்சேரிக்கு அனுப்பப்பட்ட மொத்த ஆதாயம் மூன்றுகோடியே முப்பத்தைந்து லட்சத்துப் பதினாயிரத்து அறுநூற்று முப்பத்தொண்பது ரூபாய் ஏழணா நான்கு பைசா ஆகிறது. இதோ பாருங்கள் ஒன்பது ரசீதுகள் - என்று ரசீதுகளை எடுத்துக் கொடுத்தார். திவான் அவைகளை வாங்கிப் பார்க்க, எல்லாவற்றிலும், தமது கையெழுத்துகளைப் போலவே கையெழுத்துகள் செய்யப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை குத்தப்பட்டிருந்து. அந்த ரசீது களை உடனே அரசன் வாங்கி வைத்துக்கொண்டார்.

அதன் பிறகு திவான் அவ்விடத்திலிருந்த கணக்குகளை எல்லாம் எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்து, கஜானாவிலிருந்த பணங்களையும் சோதனை செய்தார். கணக்குகள் யாவும் பரிஷ் காரமாகவும் ஒழுங்காகவும் வைக்கப்பட்டிருந்தன. கணக்கில் காட்டப்பட்டபடி அந்த நிமிஷத்தில் எவ்வளவு தொகை கஜானாவில் இருக்க வேண்டுமோ, அந்தத்தொகை ஒரு காசு குறையாமல் கஜானாவில் அப்போது இருந்தது.

உடனே திவான் தாசில்தாரைப் பார்த்து, 'ஐயா ஒவ்வொரு வருஷக் கடைசியிலும் மிச்சப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு போன பாராக்காரர்கள் இன்னார் இன்னார் என்ற அடையாளம் உமக்குத் தெரியுமா?" என்றார். بر*

தாசில்தார், 'பத்துத் தாசில்தார்கள் செய்யத் தகுந்த வேலையை நான் ஒருவனே பார்த்து வருகிறேன். சேவகர்கள் யார் யார் வருகிறார்கள் என்பதைக் கவனிக்க எனக்கு அவகாசம் கிடையாது. எல்லாப் பணமும் திவான் சாயப் கச்சேரிக்கு ஒழுங் காய்ப் போய்ச் சேர்ந்தது என்பதற்கு நான் ரசீதுகள் கொடுத்து விட்டேன். தங்களுடைய கச்சேரிப் பாராக்காரர்களுடைய அடை யாளம் தங்களுக்குத்தான் தெரியவேண்டும்” என்றார்.

66