உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்குலோத்துங்க சோழன்

77

14. முடிவுரை

அதிகாரங்களால்

இதுகாறும் எழுதியுள்ள பல பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சோழமண்டலத்தில் சக்கர வர்த்தியாக வீற்றிருந்து நம் தமிழகத்தையும் இதற்கப்பாலுள்ள பிறநாடுகளையும் ஆட்சி புரிந்த முடிமன்னனாகிய முதற் குலோத்துங்க சோழனது வரலாற்றை ஒருவாறு நன்குணரலாம். அன்றியும் சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகள்வரை நம் தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இவ்வரலாற்று நூல் இயன்ற வரை இனிது விளக்கா நிற்கும். நல்வினை முதிர்ச்சியால் அறிவு திருவாற்றல்களுடன் நிலவிய நம் வேந்தர் பெருமான் கடைச்சங்க நாளில் சிறப்புடன் விளங்கிய சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலான முடிமன்னர்களோடு ஒருங்கு வைத்து எண்ணத்தக்க பெருமையும் புகழும் உடையவன் என்பதில் சிறதும் ஐயமில்லை. இத்தகைய பெருவீரன் அரசு வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடைநகரம் கங்கை கொண்ட சோழபுரம் ஆகும். நம் குலோத்துங்கனது தாய்ப் பாட்டனாகிய கங்கை கொண்ட சோழனால் அமைக்கப்பெற்ற இப்பெருநகரம் அவ்வேந்தன் காலத்திலேயே சோழ மண்டலத் திற்குத் தலை நகராகும் பெருமை எய்திற்று. அவனுக்குப் பின்னர், சோழர் களது ஆட்சியின் இறுதிவரை இந்நகரமே எல்லாச் சோழமன்னர் களுக்கும் தலைநகராக இருந்தது. எனவே, இது தஞ்சையினும் சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந்திருத்தல் வேண்டும். இந்நகர், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும் விக்கிரமசோழனுலாவிலும், கங்கை மாநகர் என்று வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரம் என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைவாய்ந்த இந்நகரம்