உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்குலோத்துங்க சோழன்

சேர்க்கை

-

1

முதற் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள்

(முதல் மெய்க்கீர்த்தி)

1. திருமன்னி விளங்கு மிருகுவ டனையதன்

தோளும் வாளுந் துணையெனக் கேளலர் வஞ்சனை கடந்து வயிரா சரத்துக் குஞ்சரக் குழாம்பல வாரி யெஞ்சலில் சக்கரக் கோட்டத்துத் தாரா வரசனைத் திக்கு நிகழத் திறைகொண் டருளி அருக்க னுதயத் தாசையிலிருக்குங் கமல மனைய நிலமக டன்னை முந்நீர்க் குளித்த வந்நா ளாதிக் கேழ லாகி யெடுத்த திருமால் யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத் தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தித்

திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப் புகழுந் தருமமும் புவிதொறு நிறுத்தி

வீரமுந் தியாகமும் மானமுங் கருணையும்

உரிமைச் சுற்ற மாகப் பிரியாத்

தலநிகழ் சயமுந் தானும்வீற் றிருந்து

குலமணி மகுட முறைமையிற சூடித்

தன் கழல் தராதிபர் சூடச் செங்கோல்

நாவலம் புவிதொறும் நடாத்திய கோவிராசகேசரி

வன்மரான

உடையார் ஸ்ரீ ராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு

(இரண்டாவது மெய்க்கீர்த்தி)

2. புகழ்சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியிற்

பொன்மேனி யளவுந் தன்னேமி நடப்ப

79